குறிப்பிட்ட அகலத்திலான செல்களுடன் டேபிள் வேர்டில் டேபிள் உருவாக்குவது எளிது. டேபிள் ஒன்றை இன்ஸெர்ட் கட்டளை கொடுத்து அமைக்கையில், செல் ஒன்றின் அகலம், கிடைக்கும் மார்ஜின் நீளத்தை, சரி சமமாக, நாம் அமைக்கும் செல்களின் எண் ணிக்கைக்கேற்றபடி அமைக்கப்படும். சில வேளைகளில், முதல் இரண்டு செல்கள் அல்லது மற்ற செல்கள் சிலவற்றில் அதிக அகலம் தேவைப்படலாம். எடுத்துக்காட்டாக, மார்ஜின் வெளியின் முழு நீளத்தில், 12 செல்கள் அடங்கிய ஒரு டேபிள் அமைக்கிறீர்கள். இதில் முதல் இரண்டு செல்கள்,சற்று அதிக அகலத்திலும், மற்ற 10 செல்கள் சரி சமமான அகலத்திலும் அமைக்கப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள். இதற்கான வழிமுறையைப் பார்ப்போமா! 1. முதலில் ஒரு படுக்கை வரிசை (onerow), மூன்று செல்கள் உள்ள டேபிள் ஒன்றை அமைக்கவும். இது மார்ஜின் வெளியில், இடது மூலையிலிருந்து வலது மூலை வரை,சரி சமமான அளவிலான செல்களுடன் அமைக்கப்படும். 2. அடுத்து, முதல் இரண்டு செல்களில், கர்சரைக் கொண்டு சென்று, தலைப்பில் உள்ள செல் பார்டரை இழுத்து, தேவையான அகலத்தில் அமைக்கவும். 3. அடுத்து மூன்றாவதாக உள்ள செல்லின் உள்ளாகக் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். 4. பின்னர், டேபிள் மெனுவை விரித்து, அதில் Split Cells என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் இங்கு Split Cells என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும். 5. அடுத்து Number of Columns என்ற கண்ட்ரோலைப் பயன்படுத்தவும். அதில் இந்த செல் பத்து செல்களாகப் பிரிக்கப்பட வேண்டும் எனக் கொடுக்கவும். 6. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
முதல் பக்கத்தில் பக்க எண்ணை மறைத்திட வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், முதல் பக்கத்தில் பக்க எண் காட்டப்படுவதையோ, அச்சிடப்படுவதையோ பலர் விரும்ப மாட்டார்கள். ஆனால் பக்க எண் பார்மட் செய்யப்படுகையில் முதல் பக்கத்திலும் அது காட்டப்படும். இதனை மட்டும் எப்படி மறைக்கலாம் என்று இங்கு பார்க்கலாம். முதலில் ஒவ்வொரு பக்கத்திலும் பக்க எண் காட்டப்படுவதை எப்படி அமைக்கலாம் என்று பார்க்கலாம். வேர்ட் 2007 மற்றும் வேர்ட் 2010 தொகுப்புகளில், டாகுமெண்ட்டைத் திறந்து, அதில் ஹெடர் அண்ட் புட்டர் என்னும் பிரிவில் டபுள் கிளிக் செய்திடவும். பின்னர், இந்த குழுவில், Page Number என்பதில் கிளிக் செய்து, அது தோன்றும் இடத்தையும் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். வேர்ட் 2003 தொகுப்பில், Header and Footer மீது டபுள் கிளிக் செய்திடவும். அல்லது View மெனு சென்று கிடைக்கும் மெனுவில் ஹெடர் அண்ட் புட்டர் தேர்ந்தெடுத்துப் பெறவும். இப்போது கிடைக்கும் ஹெடர் அண்ட் புட்டர் டூல் பாரில் Insert Page Number என்பதில் கிளிக் செய்திடவும். அதில் கிடைக்கும் மற்ற டூல்களையும் பயன்படுத்தி இதனை ஒழுங்குபடுத்தலாம். இனி கீழ்க்கண்ட வழிகளில், முதல் பக்கத்தில் தோன்றும் எண்ணை நீக்கலாம். வேர்ட் 2007 மற்றும் 2010 தொகுப்புகளில், Page Lay Out டேப்பினைக் கிளிக் செய்திடவும். அடுத்து, வலது கீழாக உள்ள சிறிய அம்புக் குறியில் கிளிக் செய்து Page Set up குரூப் டயலாக் பாக்ஸினைக் கொண்டு வரவும். பின்னர் Lay Out டேப்பினைக் கிளிக் செய்திடவும். இதில் உள்ள Header and Footer பிரிவில் Different First Page என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். வேர்ட் 2003 தொகுப்பில், ஹெடர் அண்ட் புட்டர் டூல்பாரில், பேஜ் செட் அப் தேர்ந்தெடுக்கவும். இதில் லே அவுட் டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Different First Page என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். |