ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் ஜிமெயில் அப்ளிகேஷனை இதுவரை, கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நூறு கோடிக்கும் அதிகமானவர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவதாக, கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, சுந்தர் பிச்சை தன் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள அப்ளி கேஷன் இந்த அளவிலான எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே Google Search, Facebook மற்றும் Google Maps ஆகிய அப்ளிகேஷன்கள் 50 கோடியைத் தாண்டி 100 கோடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நூறு கோடி - ஜிமெயில்
type="html">