Searching...
Tuesday, July 1, 2014

எக்ஸெல் தொகுப்பில்ஒர்க் ஷீட்டுகளை இடம் மாற்ற - how to exchange EL sheet in tamil

எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கப்பட்ட ஒர்க் ஷீட்களை அதன் ஒர்க் புக்கில் இடம் மாற்றி வைக்கலாம். வே
று ஒர்க் புக்கிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றாலும் அப்படியே கொண்டு செல்லலாம். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம். அதே ஒர்க் புக்கில் ஒர்க் ஷீட்டின் இடத்தை மாற்ற அதற்கான ஷீட் டேபில் கிளிக் செய்திடவும். கிளிக் செய்தவாறே மவுஸை விடாமல் இழுக்கவும். இழுத்து வந்து எந்த இடத்தில் ஒர்க் புக்கினை வைத்திட வேண்டுமோ அந்த இடத்தில் வைத்திட வும். அப்படி இழுக்கையில் எக்ஸெல் சிறிய முக்கோணம் ஒன்றைக் காட்டும். எந்த இடத்திற்கு ஒர்க் புக் இழுத்துச் செல்லப்படுகிறது என்பதைக் காட்டும். இன்னொரு ஒர்க்புக்கிற்கு எப்படி ஒர்க் ஷீட்டை இழுத்துச் செல்வது என்று பார்ப்போம்.



1. ஒர்க் ஷீட்டிற்கான ஷீட் டேபில் ரைட் கிளிக் செய்திடவும்.
2. இப்போது கிடைக்கும் மெனுவில் Move அல்லது Copy என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. இதில் To Book என்ற டிராப் டவுண் லிஸ்ட் கிடைக்கும். இதில் புதிய ஒர்க் புக்கும் உருவாக்கலாம்.
4. புதிய ஒர்க் புக்கில் உள்ள ஷீட்களில் எந்த ஷீட்டுக்கு முன்னாலும் பின்னாலும் இதனை விட்டுவிடலாம். அல்லது Move தேர்ந்தெடுத்து முடிக்கலாம்.
5. செய்வதற்குப் பதிலாக காப்பி செய்திடத் திட்ட மிட்டால் Create a Copy Check Box என்பதில் கிளிக் செய்து செயல்படவும்.
6. அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
 
Back to top!