Searching...
Monday, July 7, 2014

குரோமில் மேம்பட்ட History பக்கம்–குரோம் நீட்சி

type='html'>

நீங்கள் கூகிள் குரோம் பயன்படுத்துபவா் எனில் உங்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.
கூகிள் குரோம் உலாவியில் அண்மையில் நீங்கள் வலம் வந்த இணையப் பக்கங்களின் பட்டியலை பார்வையிட Ctrl + H ஐ அழுத்துவதன் மூலம் History(நீங்கள் வலம் வந்த இணையப் பக்கங்களின் பட்டியல்) பக்கம் தோன்றும். இதன் மூலம் நீங்கள் எந்த நாளில் எந்தப் பக்கத்திற்குச் சென்று வந்தீா்கள் என்று அறியலாம். ஆனால் குரோமில் உள்ளமைந்த இந்த History பக்கம் வேண்டிய தகவலை சரியான முறையில் தருவதில்லை. அதாவது இன்று சென்று வந்த பக்கங்களையோ அல்லது 1 நாளைக்கு முன் சென்ற பக்கங்களையோ வகைப்படுத்திப் பார்க்கமுடியாது.
இந்தக் குறையை நிவா்த்தி செய்து History ஐ மேம்பட்ட பக்கமாக மாற்ற History 2என்ற குரோம் நீட்சி உதவுகின்றது.
இந்த மேம்பட்ட History பக்கத்தில் இன்று,நேற்று அல்லது அதற்கு முதல் நாள் என வகைப்படுத்திப் பார்க்கலாம். அத்துடன் இந்த மேம்பட்ட பக்கமானது ஒவ்வொரு Domain ஐயும் ஒன்றாக தொகுத்து அந்த Domain இல் எத்தனை பக்கங்களுக்கு சென்று வந்தோம் என்றும் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
History 2
நீங்களும் இந்த நீட்சியை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் இங்கே கிளிக் செய்யுங்கள்.
 
Back to top!