Searching...
Saturday, June 14, 2014

பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி?



பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது சில நேரம் கீழ்க்கண்ட பிழைச்செய்தியைக் காட்டும்.

"Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk" 


என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்கு வைரஸ் பிரச்சினை உட்பட பல காரணங்கள் இருக்கின்றன. இதனை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.


எளிமையான வழி:
 
வழி:1   
Start - Run செல்லவும்.
வழி:2 
பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.
reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies"/t Reg_dword /v WriteProtect /f /d 0


வழி:3
பின்னர் உங்கள் கணிணியை ரீஸ்டார்ட் செய்து விட்டு மறுபடியும் பென் டிரைவை சொருகி சரிபார்க்கவும்.  இப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம்.

write protected வழி:

உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்து வைக்க வேண்டும் எனில் கீழே உள்ளபடி
Start - Run செல்லவும்.
பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.
reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 1


 
Back to top!