1.. AVIRA
இலவச Antivirus புரொகிராம்களில் எது சிறந்தது என்று கேட்டால் அனைவரும்
கூறுவது avast 'தான். ஆனால் நான் பயன்படுத்தி பார்த்ததில் அதிக வைரஸ்களை
அழித்து. மெமரியும் குறைவாகப் பயன்படுத்தி முதலிடம் பிடித்தது Avira
'தான். ஏன் என்பதை கீழே கொடுத்துள்ளேன்.
- அற்புதமான இலவச Antivirus. விலை கொடுத்து வாங்கும் ஆன்டிவைரசே சில வைரஸ்களை கோட்டை விடுகையில் இலவச ஆன்டிவைரஸான Avira பெரும்பாலான வைரஸ்களை முழுமையாக அழிக்கிறது.
- குறிப்பாக New Folder.exe போன்ற வைரஸ்களை அழிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.
- வெறும் 2MB யிலிருந்து 4MB வரையே மெமரியை எடுத்துக்கொன்டு கணினியை பாதுகாப்பதில் திறம்பட செயல் படுகிறது.
- இதற்கான அப்டேட்டுகளை நாம் தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
2.. AVAST
- பலராலும் பயன்படுத்தப்படும் அற்புதமான இலவச ஆன்டிவைரஸ் என்னுடய மதிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
- ஒரு சில வைரஸ்களை விட்டுவிடுகிறது. எடுத்துக்காட்டாக ( New Folder.exe, Recycler ) போன்ற வைர்ஸ்களை கண்டுபிடிப்பதே இல்லை.
- வைரஸ்களை களைய நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது. இதுவும் அதிக மெமரியை எடுத்துக் கொள்ளவில்லை.
- சில வினாடிகளில் தாமாகவே அப்டேட் செய்து கொள்ளும்.
3.. AVG
- AVG Antivirus பயன்படுத்தினால் விண்டோஸ் துவங்குவதற்க்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
- இது குறைவாக 30MB மெமரியை ஆக்ரமித்துக் கொண்டது.
- இதுவும் வைரஸ்களை களைவதில் சிறப்பாக செயல்படுகிறது.
- இதனுடய இன்டெர்ஃபேஸ் சற்று பழயதாக இருக்கும்.